Sunday 12 January 2014

கடிகாரம்


இன்றேனும் ஏதேனும் ஒன்று
நன்றேனும் செய்தோமா என்று
சுற்றி வந்து நம்மை
உற்றுப் பார்க்கிறது காலம்.

நினைவு சிறு முள்
வயது பெரு முள்
வாழ்க்கையின் உள்
காலத்தின் சொல்.

பின்னோக்கி நகராதா என‌
ஏங்க வைக்கும் முட்கள்
எல்லா கடிகாரத்தின்
உள்ளேயும் உண்டு

எத்தனை கோடி கரங்கள்
எத்தனை கோடி ரகங்கள்
இரண்டே முள்
ஒரே காலம்?

முள் நொடி அசைவதற்குள்
முடிந்து விடும் மூச்சடைத்து
வருடக்கணக்கில் வட்டமிடும்
நம் இருப்பு எதன் பொருட்டு?

1 comment:

  1. குமரன் சார், கவிதை நல்லாத்தான் இருக்கு ஆனா காலத்த பிடிச்சு நீங்க ரொம்ப ஓவராத்தான் தொங்கறீங்க போங்க ‍
    ரமேஷ்

    ReplyDelete