Sunday, 27 October 2013

காலத்தின் கணக்கு

நேற்றாலே வாழ்கிறேன்
நேற்றில் நான் வாழ்கிறேன்...
முழுமையற்று கடந்தாலும்
முட்கள் சில இருந்தாலும்
கடந்து வந்தவையாலும்
கழிந்து போனவையாலும்
இன்று மீதேறி நின்று
நேற்றை பார்த்து வாழ்கிறேன்...
நாளை வரும் நாளும் கூட‌
நாளையின் மறு தினத்தில்
நேற்று என்று ஆவதே
நேர விதி ஆனதால்
நேற்றிலேயே வாழ்கிறேன்
நேற்றாகவே ஆகிறேன்...

3 comments:

  1. (1) நேற்றாலே வாழ்வது பிழையில்லை, நேற்றிலேயே வாழ்ந்துவிடப் பார்ப்பது தான் பிழை. உடனே விழித்துக்கொள்ளுங்கள். 'இன்று' என்பது 'நேற்று' ஆகிவிட ஒருநாள் போதுமே! உடனே விழித்துக்கொள்ளுங்கள்.(2) நல்ல கவிதை. வாழ்த்துக்கள்! - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    ReplyDelete
  2. குமரன், உங்க பதிவுகள் படிக்கும்போதே நீங்க நேற்றுல வாழுறவரு அப்படிங்கறது தெரியுதுங்க! நல்லா எழுதுறீங்க தீபாவளி வாழ்த்துக்கள் ‍- ராம்

    ReplyDelete