Tuesday 24 July 2012

காடு - ஒரு அறிமுகம்


காட்டின் விடியல் காண்கின்ற விழியும்
மனதுக்குள்ளே அது பாய்ச்சும் ஒளியும்
பறவைகள் தமக்குள் பேசுகின்ற மொழியும்
காலாற நடக்கையில் காற்று வீசும் ஒலியும்
கடக்கின்ற ஒவ்வொரு நிமிடத்தின் துளியும்
மகிழ்ச்சியின் சாறாய் நம்மீது வழியும்.

புற்களின் அசைவிலும் உற்சாகம் இருக்கும்
சொற்களை மீறிய அர்த்தங்கள் கொடுக்கும்
வனத்தின் வசீகரம் நம் வயதை குறைக்கும்
சுத்தமான காற்று நுரையீரல் நிறைக்கும்
நகரத்து வாழ்வின் அச்சாணி முறியும்
இயற்கை என்பதன் உச்சாணி புரியும்

3 comments:

  1. வனத்தின் வசீகரம் நம் வயதை குறைக்கும்
    சுத்தமான காற்று நுரையீரல் நிறைக்கும்
    நகரத்து வாழ்வின் அச்சாணி முறியும்
    இயற்கை என்பதன் உச்சாணி புரியும்//

    மனம் தொட்ட அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. What we get in a forest in simple words!

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு...
    நன்றி நண்பரே...

    ReplyDelete