Thursday 27 October 2011

"சமச்சீர்" கல்வி

குப்பனோ சுப்பனோ குபேரனுக்கு அப்பனோ
பள்ளிக்குப்   போகாத பாமரனோ
பட்டங்கள் பெற்ற நாவலனோ
அப்பழுக்கற்றவனோ அற ஒழுக்கமற்றவனோ
எவனாய் ஆயினும் எங்கே போயினும்
எதிர்கொள்ளும் நிகழ்வு பல
ஏனென்ற கேள்வி தரும்.
பிறிதொரு பொழுதிலோ பின்னொரு நிகழ்விலோ
அதன் பதில் ஆழமாய் அடிமனதில் இறங்கி விடும்
கத்தியால் சொருகினாற்போல் புத்திக்கு விளங்கி விடும்
அனுபவச்  செறிவோ ஆன்மீக விரிவோ
ஒன்று மூலம் மற்றொன்றில் ஓரளவு தேர்ச்சி வரும்
நன்று தீது எல்லாமும் நாளடைவில் நீர்த்து விடும்
கடவுளின் பள்ளியில் காலமெனும் ஆசிரியர் 
வயதின் வகுப்புகளில் வந்தெடுக்கும் பாடங்களில்
சமச்சீர் கல்வி சற்றேனும் சாத்தியமே!

2 comments:

  1. Your book title fits well with poems inside on rainy nights

    ReplyDelete
  2. Lines I love
    "இப்படிதான் இருக்குமென்று இதற்குமுன் தெரிந்திருந்தால் எப்படியோ இருந்திருப்போம் என்றென்னும் வயது"



    "அத்தனையும் துடைத்தெறிய அரை நொடி போதும் ஆயினும் ஏனோ அதன் போக்கில் காலம்"

    "அணு அணுவாய் அறையப்பட்ட அனுபவ ஆணி அடி முட்டாளையும் கூட ஆக்கிடும் ஞானி"

    "புல் சிறக்க மழை கேட்ட நிலத்தை எள் வைத்து எரித்தாய் நீ"


    "தூக்கத்தின் நடுவினிலே துயரமின்றி சாதல்"

    and more and more

    ReplyDelete