Saturday 6 October 2012

மழையோடு மழையாகி...


நம் நினைவு புத்தகத்தை
தன் நெடிய கரங்களினால்
வருடிப் பார்க்கும் வானத்திற்கு
வசதியான விரல்கள் மழை.

வானம் தெளிக்கும் நீரை எடுத்து
தேகம் முழுக்கத் தேடிப் பிடித்து
என்றோ சேர்த்த ஏதோ நினைவை
எப்படி எடுக்கிறது மழை?

நேரம் சற்று மறந்து
சாரல் மழையில் நடந்து
தேகம் நனைக்கத் தெரிந்து
பாரம் இறக்கப் பழகு.

மழையை ரசிக்கும்
மருத்துவம் படித்தால்
மனதின் நோய்கள்
மழையால் நீங்கும்.

4 comments:

  1. நல்ல வரிகள்... ரசித்தேன்...

    ReplyDelete
  2. அருமை சகோ நன்றிகள் பல பல எங்க பக்கமும் வந்து போறது

    ReplyDelete
  3. சென்னை நீலம் புயல் நடுவே உங்கள் மழை கவிதைகள் படிக்க நேர்ந்தது. அழகு

    ReplyDelete