Wednesday, 13 June 2012

மழை விழும் பொழுது...

வீதியெங்கும் விரல் பதித்து
வட்ட வட்ட புள்ளி வைத்து
நீர்க் கோலம் போட்டபடி
ஊர் சுற்றும் மழை.

மேகங்களில் உறங்கி
வானத்தில் இறங்கி
கார் காலத் தேர் ஏறி
ஊர் வந்து சேர் மழை.

உடை நனையும் என்று நினைத்து
குடை விரித்து நாம் பிடித்தால்
மழைக்கு வருத்தம் வரும்
மண் மேல் புரண்டு அழும்.

மாபெரும் ம‌ழையின்
ஓரிரு துளிகள்
கையில் ஏந்திப் பார்
க‌ளிப்பில் நீந்திப் பார்.

3 comments:

  1. உடை நனையும் என்று நினைத்து
    குடை விரித்து நாம் பிடித்தால்
    மழைக்கு வருத்தம் வரும்
    மண் மேல் புரண்டு அழும்//.

    வித்தியாசமான அருமையான கற்பனை
    அசத்தலான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. உடை நனையும் என்று நினைத்து
    குடை விரித்து நாம் பிடித்தால்
    மழைக்கு வருத்தம் வரும்
    மண் மேல் புரண்டு அழும்.//

    :)ம‌ழையை குழ‌ந்தையாக்கி, ம‌ழையால் குழ‌ந்தையாகி...

    ReplyDelete