தொடுவானில் சூரியன் கடலில் விழும் மாலை
காய்ச்சிய இரும்பாய் கடல் சிவக்கும் வேளை
பார்க்கின்ற அனைவருக்கும் காலத்தின் ஓலை
வாசிக்கத் தருவதே கடலுக்கு வேலை.
நினைவின் குமிழே நுரையாகும்
நினைக்க நினைக்க அலையாகும்
வருவதும் போவதும் கரையாகும்
வாழ்க்கை வடிவம் கடலாகும்.
கரையில் இருக்கும் கண்களுக்கு
மனதில் வலிக்கும் புண்களுக்கு
எளிதில் அமைதி ஏற்படுத்தும்
அலையின் மருந்து அற்புதமே!
தொட்டுப் போன அலை - நம்மேல்
ஒட்டி வைக்கும் மணல் - அதில்
எட்டிப் பார்க்கும் காலம் - கை
தட்டிச் சிரிக்கும் கடல்.
காய்ச்சிய இரும்பாய் கடல் சிவக்கும் வேளை
பார்க்கின்ற அனைவருக்கும் காலத்தின் ஓலை
வாசிக்கத் தருவதே கடலுக்கு வேலை.
நினைவின் குமிழே நுரையாகும்
நினைக்க நினைக்க அலையாகும்
வருவதும் போவதும் கரையாகும்
வாழ்க்கை வடிவம் கடலாகும்.
கரையில் இருக்கும் கண்களுக்கு
மனதில் வலிக்கும் புண்களுக்கு
எளிதில் அமைதி ஏற்படுத்தும்
அலையின் மருந்து அற்புதமே!
தொட்டுப் போன அலை - நம்மேல்
ஒட்டி வைக்கும் மணல் - அதில்
எட்டிப் பார்க்கும் காலம் - கை
தட்டிச் சிரிக்கும் கடல்.
Well thought and well writted Kumaran.
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
கடைசிப் பந்தி போதும் வாழ்க்கையைச் சொல்ல !
ReplyDelete