Sunday, 1 July 2012

ஒரு சொல்

பல காலம் சொல்லிப் பழகிய சொல்லின்
வாழ்வாலும் வயதாலும் பதிவாகும் ஒன்றின்
உச்ச‌ரிப்பின் உயிர் போன சடலமாக‌
உயிர் தந்த சொல்லின் உருவ‌ம் மாற‌
சொல்லின் எழுத்துக்களை சுடுகாட்டில் குவித்து
அதனோடு அச்சொல்லின் அர்த்தங்களை அவித்து
பொருளின் வடிவத்தை சிதையிலே தள்ளி
நாக்கினால் சொல்லுக்கு வைத்தாயிற்று கொள்ளி
வேகாத‌ சொல்லை சாம்ப‌லாய் அள்ளி
நினைவின் கோலத்தில் நிரந்தரப் புள்ளி.

2 comments:

  1. நானும் உங்களுடன் துயரத்தை பங்கு கொள்கிறேன்.
    திருமதி ரமணி அவர்களின் ஆன்மா சாந்தி அடைய மனப்பூர்வமாக பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. மனதை என்னவோ செய்யும் கவிதை - ராஜி

    ReplyDelete