நம் வீட்டில் தன் கூட்டை நாமறியாது கட்டி
அன்றாடம் நம்மோடு தன் வாழ்வை ஒட்டி
வருடக்கணக்கில் வசித்த நம்மூர் குருவி
எப்படித்தான் போனது எங்கேயோ விலகி?
நம் வீட்டு முற்றத்தில் எஞ்சிய பருக்கைகளை
நன்கறிந்து பறந்து வந்து கொஞ்சிக் குறுமொழியில்
கொத்திச் செல்லும் குருவியை வஞ்சித்த பாவமெல்லாம்
நம்மையே சேரும் வருங்காலம் தோறும்...
அறைக்குள் பறக்குமென்று மின்விசிறி நிறுத்தி
கதவிடையே இருந்தால் கண்களை உறுத்தி
அடிபட்டால் அதன் மேல் அன்பினை காட்டி
தேங்காய் ஒட்டில் நீர்வைத்து ஊட்டி
பறவையிடம் கூட பழகினோம் அன்று
சுயநலம் பிடித்து அழுகினோம் இன்று
அலைபேசி கோபுரங்கள் அதிகளவில் நிறுவி
ஆளுக்கொரு கத்தியை அதன் முதுகில் சொருகி
கொலை செய்த நமது ஊரை விட்டு விலகி
"மதியாதார் தலைவாசல்" அர்த்தத்தை பருகி
மறைந்தே போனது மானமுள்ள குருவி!
உண்மை தான்... எங்கள் ஊரிலும் பார்த்து பல நாட்கள் ஆகி விட்டது...
ReplyDeleteஅப்படித்தான் இருக்குமென நினைக்கிறேன்
ReplyDeleteதலைப்பு மனம் கலங்கச் செய்தாலும்
கவிதை மனம் கவர்கிறது
தொடர வாழ்த்துக்கள்
இன்றைய கைத்தொலைபேசி கொபுரங்களினால் ஏற்படும் விபரீதங்களை அருமையாக கூறியுள்ளிர்கள்
ReplyDelete