Thursday, 30 August 2012

நேற்றிருந்த மரம்...

நீ நின்ற‌ இடத்தில் நான் இன்று இருக்கையில்
வெயிலில் சுடுகிறது நினைவின் நிழல்;
இயந்திரம் உந்தன் சிறகுகள் முறிக்கையில்,
அடிவரை அறுத்து உன் உயிர் குடிக்கையில்,
வெட்டப்படும் வேர்கள் உதவிக்கு அழைக்கையில்,
முன்னேற்றத்தின் முக்காடுக்குள்
ஒளிந்து கொண்டேன் நான்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
கற்பனை அல்ல கட்டாயம் நிகழும்
மழை மெல்ல மண்ணை விட்டு தூரமாக போகிறது
புத்தி கெட்ட நமக்கு இது புரியவா போகிறது?

4 comments:

  1. மழை மெல்ல மண்ணை விட்டு தூரமாக போகிறது
    புத்தி கெட்ட நமக்கு இது புரியவா போகிறது?//

    அருமையாகச் சொல்லிப்போகிறீர்கள்
    புத்தியுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

    வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  3. வரம் தரும் தாவரவளங்களைச் சிதைப்பவர்கள் கட்டாயம் உணரவேண்டிய கருத்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete