Saturday, 22 December 2012

கால ஞானம்


இன்று என்பது நாளையின் நேற்று
இவற்றின் தொகுப்பே காலத்தின் ஊற்று
இடையே இயங்குது நம் மூச்சுக் காற்று
இப்பொழுதும் எப்பொழுதும் இதற்கில்லை மாற்று;

ஒவ்வொரு நொடியையும் அதன்வழி பார்த்து
வருகின்ற அனுபவம் வயதுடன் சேர்த்து
கடக்கின்ற அனைத்தையும் காலத்தில் கோர்த்து
காலத்தின் வழியே கடவுளை நோக்கு.

2 comments:

  1. கவிதையின் கருவும்
    சொல்லிச் சென்ற விதமும்
    இயல்பாய் அமைந்த இயைபுத் தொடையும்
    மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. beautiful poems. enjoyed reading - Hari

    ReplyDelete