Thursday, 19 January 2012

வயதின் சுவை...

நாற்பது அருகில் வந்தாச்சு நல்லது கெட்டது  புரிஞ்சாச்சு
உலகின் நிறங்கள் தெளிவாச்சு உறவும் பிரிவும் இயல்பாச்சு
தாயைத் தீயில் இட்டாச்சு தவிப்பு நிறைய பட்டாச்சு
வலிகளில் வலிமை சேர்த்தாச்சு வழிபோக்கர்கள் பார்த்தாச்சு
தாரம் தாய்போல் ஆயாச்சு பாரம் பகிரும் தோளாச்சு
ஒவ்வொரு நாளும் பிறப்பாச்சு செயல்கள் மேலும் சிறப்பாச்சு
அன்பு இன்னும் அழகாச்சு அறிவின் தேடல் விரிவாச்சு
பார்வைகள் பலவும் புதுசாச்சு பழையவை அவற்றின் விழுதாச்சு
மனதை நன்றாய் உழுதாச்சு மலர்கள் மட்டும் பயிராச்சு
நடுத்தர வயதின் முழுவீச்சு நாற்பதில் தெரியும் எனப்பேச்சு
காலம் ஊன்றுகோல் போலானால் கவலைகள் எல்லாம் கால்தூசு.







3 comments:

  1. அருமையான கவிதை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    மிக்க நன்றி.

    ReplyDelete
  2. வாழ்க்கையை பிரதிபலிக்கும் அற்புதமான, எளிமையான படைப்பு

    ReplyDelete
  3. வலிகளில் வலிமை சேர்த்தாச்சு ....வலிமையான வரிகள்,முகத்தின் வரிகளிலும் முதிர்ச்சி புரிகிறது.அகம் தரும் கருத்தினில் அறிவு கண் திறக்கிறது.

    ReplyDelete