Monday, 10 October 2011

மழை பெய்த வீதி...

மழையாடும் தெருவில்
நனைந்தோடும் நாய் போல்
அலையும் நினைவை
கழுவும் மழை.

மேகநீர் பாசனத்தில்
தேகவயல் உழுது
ஞாபகங்கள் பயிரிடும்
வாகனம் மழை.

வசதியான இருக்கை; வந்து தொடும் தூறல்;
உருகும் நினைவு பருகும் மழை
பருகிய நினைவால் பருத்த மேகம்
நினைவின் அடர்த்தியால் கறுத்த வானம்
மீண்டும் நினைவை மழையாய் பொழிய
மழையை நினைவாய் நாமும்  அருந்த
மழைக்கும் நமக்கும் இருக்கும் உறவு
மனதையும் நினைவையும் இணைக்கும் விழுது.

3 comments:

  1. குமரன், உங்கள் புத்தகம் வாசித்தேன். எளிமையான வரிகள், அழகான எதுகை மோனை, ஆழ்ந்த சிந்தனைகள் மிக நன்று. காலமே கடவுள் என்று நச்சென்று சொல்லும் கவிதைகள் காலத்தை காதலிக்கத்தூண்டுகிறது. "நனைந்து காய்ந்த நமக்குள்ளே எப்பொழுதும் கடலிருக்கும்" போன்ற பிரமிப்பூட்டும் வரிகளும் "காட்சிப்பிழை" போன்று நம் வாழ்க்கை முறையை தோலுரிக்கும் கவிதைகளும் நான் சமீபத்தில் படித்த புத்தகங்களுள் இது சிறந்ததில் ஒன்று என்பேன். ஏன் "ஸ்ரீபாதம்" போன்ற கவிதைகள் நீங்கள் எழுத வேண்டும்? எளிமையாகவே எழுதலாமே? தற்பொழுது உங்கள் songs of age blog கருதும், களமும் கூட நன்றாய் இருக்கிறது.

    ReplyDelete
  2. It is raining and I enjoyed this poem

    ReplyDelete
  3. அறிமுக எழுத்தாளர், அவ்வளவாக விஷயம் இருக்காது என்று அசால்டாக வாங்கிய புத்தகம் ஆச்சர்யபடுத்தியது! lot of stuff

    ReplyDelete