வான் மழை போற்றுவோம்
Saturday, 16 February 2013
இலை மறை காய்...
அசைந்த மரம்
இசைந்த இலை
உதிர்தலில் உள்ளது
உறவும் பிரிவும்.
ஒரு சருகின் இருப்பை
உள்ளடக்கி உருவாவதே
ஓரு விதையின் கோட்பாடு.
பெருவெள்ளம் அடித்துச் செல்லும்
இலையில் தத்தளிப்பது
மரத்தின் நினைவு.
எத்தனை மரங்கள்
எத்தனை இலைகள்
இலைகள் அறியுமா
விதையின் கதை?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)